‘குஷா திட்டம்’ எனப்படும் இந்தியாவின் சொந்த நீண்ட தூர வரம்பு உடைய வான் பாதுகாப்பு அமைப்பினைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது.
இது நீண்ட தூரத்தில் உள்ள சீர்வேக ஏவுகணைகள், ரேடாருக்குப் புலப்படாத போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட எதிரி நாட்டு எறிகணைகள் மற்றும் கவச அமைப்புகளை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
உயர் இலட்சியமிக்க இத்திட்டம் ஆனது, இஸ்ரேலின் இரும்புக் கவச அமைப்பை விட சிறப்பாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், ரஷ்யாவின் S-400 அமைப்பு மற்றும் அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ அமைப்பு ஆகியவற்றின் செயல்திறனுக்கும் இணையான திறன் கொண்டதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு நீண்ட தூர வரம்புடைய நிலம் விட்டு வான் பாயும் பாதுகாப்பு அமைப்பு (LR-SAM) ஆனது, இடைமறிப்பு எறிகணைகளுடன் கூடிய நீண்ட தூர வரம்புடைய கண்காணிப்பு மற்றும்ஏவுகணை கட்டுப்பாட்டு ரேடார்களை உள்ளடக்கியது.
இந்த ஏவுகணைகள் 150 கி.மீ., 200 கி.மீ., மற்றும் 350 கி.மீ என்ற தூரத்தில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளை கண்டறிந்து தாக்கும்.
இது உத்திசார் மற்றும் போர்த்திறம் சார்ந்தப் பாதுகாப்பினை வழங்குவதில் பயன் உள்ளதாக இருக்கும்.
இரண்டு ஏவுகணைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏவப்படும் போது, இந்த அமைப்பு குறைந்தபட்சம் 80% மற்றும் 90%க்கும் அதிகமான அழிப்பு வாய்ப்பைக் கொண்டு உள்ளது.