TNPSC Thervupettagam

குஷி திட்டம் - ஒடிஸா

March 6 , 2018 2486 days 1028 0
  • மாநிலம் முழுவதும் 17 லட்சம் பள்ளி பெண் குழந்தைகளுக்கு சுகாதார பேணுகைக்கான இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்குவதற்கு ஒடிஸா மாநில அரசு “குஷி“ (Khushi) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்களை வழங்கும் இத்திட்டத்தை மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
  • இதற்கு முன் மாநில அரசானது பெண்களின் மேம்பாட்டிற்கென பிரத்யேகமாக பல திட்டங்களை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் சில:
    • மிஷன் சக்தி - பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக
    • MAMATA - மகளிருக்கான பேறுகால பயனளிப்புத் திட்டம் (Maternity benefit Scheme).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்