TNPSC Thervupettagam

கூகுளின் இணைய பாதுகாப்புப் பிரச்சாரம்

February 6 , 2018 2354 days 802 0
  • இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை இந்திய மக்களிடையே ஏற்படுத்துவதற்காக சர்வதேச இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் “பாதுகாப்பு சோதனை செய்தாயா?“ (Security Check Kiya) என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • இணைய வழியில் வங்கி கணக்குகள் திருடப்படுவதிலிருந்து (Account Hijacking) இணையத்தை முதல் முறையாக பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களை காப்பதும், தீங்கிழைக்கும் செயலிகளிலிருந்து (Malicious Apps) ஆன்ட்ராய்டு கைபேசிகளை பாதுகாப்பதும், கைபேசி தொலைந்தால் அதிலிருந்து சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட அனைத்து தரவுகளும் கசிந்து விடாமல் பாதுகாப்பதும் இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
  • இந்த பிரச்சாரமானது ஆண்டுதோறும் பிப்ரவரி 6 ஆம் தேதி கொண்டாடப்படுகின்ற பாதுகாப்பான இணைய தினத்தின் (Safer Internet Day) அனுசரிப்பின் போது வெளியிடப்பட்டுள்ளது.
  • கூகுள் ப்ளே புரோடெக்ட் (Google Play Protect) என்ற கூகுள் சேவையானது தீங்கிழைக்கும் செயலிகளிலிருந்து ஆன்ட்ராய்டு கைபேசிகளை ஸ்கேன் செய்து பாதுகாக்க உதவும்.
  • கூகுளின் மற்றொரு சேவையான “Find my Device“ ஆனது தொலைந்த ஆன்ட்ராய்டு கைபேசிகளை பயனாளர்கள் எளிதாக இடம் கண்டறிய (locate) உதவும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்