10 லட்சம் மக்கள் பயனடையக் கூடிய வகையில் 12,000 கிராமங்களுக்கு மேல் இணையச் சேவையை அளிப்பதற்காக ஆந்திரப் பிரதேச மாநில பைபர் நெட் (APSFNL - Andhra Pradesh State Fiber Net Ltd) நிறுவனத்துடன் கூகுள் இணைந்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் டிஜிட்டல் பணவழங்கீடுகள் செயலியை அதிகமான ஆன்லைன் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு கொண்டு செல்வதற்கான பணியின் ஒரு பகுதியாக தனது குறியீடான ‘Tez’ - ஐ ‘Google Pay’ ஆக மறுகுறியீடு செய்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவில் உள்ள 400 இரயில் நிலையங்களில் இலவச WiFi சேவை அளிப்பதற்காக கூகுள் நிறுவனம் இரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
மேலும் ‘Google Station’ மூலமாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு இடங்களில் WiFi சேவையை வழங்குகிறது.