கூகுள் தனது கூகுள் டெஸ்-ஐ பாரத ஸ்டேட் வங்கியுடன் (State Bank of India - SBI) ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம் SBI-ன் வாடிக்கையாளர்கள் கைபேசி கட்டண செயலியின் (Mobile Payment App) வழியாக அவர்களின் வங்கிக்கணக்கைக் கொண்டு பரிவர்த்தனை செய்து கொள்ளமுடியும்.
SBI ஆனது கூகுள் டெஸ் உடன் இணையும் முதல் பொதுத்துறை வங்கியாகும்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக இந்த செயலி மூலம் ஒரு தனிப்பட்ட UPI ID யை (Unified Payment Interface - UPI) உருவாக்கிக் கொள்ளலாம்.
தற்போது வரையில் கூகுள் நிறுவனமானது, கூகுள் டெஸ் செயலி உபயோகிப்பாளர்களை அவர்களுக்கான வங்கி ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகத்தை (Unified payment Interface Handle) உருவாக்குவதற்காக 4 வங்கிகளுடன் கூட்டிணைப்பை (Partnership) ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் நேரடியாக இந்த செயலியை பயன்படுத்தி அவர்களது வங்கி கணக்கிலிருந்து பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
எஸ்பிஐயைத் தவிர்த்து இதில் இணைந்துள்ள மற்ற மூன்று வங்கிகள்
எச்டிஎப்சி வங்கி
ஆக்ஸிஸ் வங்கி
ஐசிஐசிஐ வங்கி
அரசு, பணப்பரிவர்த்தனையைக் குறைக்கவும் (Use of Cash) UPI தளத்தின் பயன்பாட்டை அதிகரித்து டிஜிட்டல் (Digital Payment) பரிவர்த்தனையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.