கூகுள் நிறுவனமானது ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தனது புதிய உரையாடல் மென்பொருளினை அறிமுகப்படுத்த உள்ளது.
இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற OpenAI நிறுவனத்தின் ChatGPT என்ற உரையாடல் மென்பொருளுக்கு எதிராக சவால் விடுவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப் படுத்தப் பட உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனமானது, ‘நமது நாட்டின் மொழி மாதிரி (LaMDA)’ மூலம் இயங்கும் உரையாடல் பயன்பாடுகளுக்காக அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த மொழி மற்றும் உரையாடல் திறன் கொண்ட ஒரு செயலியை அறிமுகப் படுத்தியது.