TNPSC Thervupettagam

கூகுள் நிறுவனத்தின் பார்டு உரையாடு மென் பொருள்

May 15 , 2023 433 days 222 0
  • கூகுள் நிறுவனத்தின் பார்டு எனப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு உரையாடு மென் பொருள் ஆனது தற்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கப் பெறுகிறது.
  • பார்டு மென் பொருளில், நமது வினவல்கள் அல்லது சந்தேகங்களைத் தட்டச்சு மூலமாக உள்ளீடு செய்வதன் மூலம் நிகழ்நேரத்தில் இணையத்தில் தேட முடியும்.
  • சில சூழ்நிலைகளில் உபயோகப்படுத்த மிகவும் வசதியாக இருக்கும் வகையில், பார்டு மென்பொருளுடன் நமது குரலைப் பயன்படுத்தித் தொடர்பு கொள்ள முடியும்.
  • பார்டு மென்பொருள் என்பது PDF, Word மற்றும் HTML உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உரையை உருவாக்கக் கூடியதாகும்.
  • பார்டு மென்பொருள் இணையப் பக்கங்களைச் சுருக்கமாக வழங்கக் கூடிய நிலையில் இது ஒரு நீண்ட அல்லது ஒரு சிக்கலான கட்டுரையின் கருப்பொருளினை விரைவாகப் பெறச் செய்வதற்கான சிறந்த வழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்