- ஆன்லைன் இணைய தேடல் தொடர்பான விவகாரத்தில் இந்திய இணைய சந்தையில் நியாயமற்ற வணிக நடைமுறைகளை (Unfair Business Practices) மேற்கொண்டமைக்காக உலகின் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் மீது இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (CCI - Competition Commission of India) 136 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம்
- தொழிற் போட்டிச் சட்டம் 2002-ன் கீழ் (Competition Act 2002) ஏற்படுத்தப்பட்ட ஓர் பகுதி நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ (Quasi-Judicial and Statutory Body) அமைப்பே இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையமாகும்.
- மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை இந்த ஆணையம் கொண்டுள்ளது.
- தொழிற் போட்டித் தன்மை (Competition) மீது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் வணிக நடைமுறைகளை (Business Practices) ஒழிப்பதும், வணிக சந்தையில் தொழிற் நிறுவனங்களிடையே போட்டித்தன்மையை மேம்படுத்துவதும் அதனை நீடிக்கச் செய்வதும், வாடிக்கையாளர்களின் நலனை காப்பதும், இந்திய சந்தையில் அனைவருக்கும் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்வதும் இதன் கட்டாயப் பணிகளாகும்.
- இது மத்திய பெரு நிறுவன விவகாரத்துறை (Ministry of Corporate Affairs) அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.