பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனம் கட்டண செலுத்து செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு Google Pay என பெயரிடப்பட்டுள்ளது.
இது APPLE PAY செயலிக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூகுள் தனது கட்டண செலுத்து செயலிகளான, ஆண்டிராய்டு பே (Android Pay) மற்றும் கூகுள் பணப்பை (Google Wallet) ஆகியவற்றை இணைத்து இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த செயலியானது பொது போக்குவரத்திற்காக பணம் செலுத்தக்கூடிய (Pay for Public Transportation) அல்லது ஸ்மார்ட்போன்கள் மூலமாக பணம் செலுத்தக் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது.