நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் ஜன்மம் நிலங்களில் அடிப்படைக் கேளிக்கை வசதிகளை உருவாக்குவதைத் தடுக்கும் தற்காலிகத் தடையை நீக்குவதற்காக உச்ச நீதிமன்றத்தினை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு கூடலூர் ஜன்மம் நிலப்பரப்பு (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி நிலங்களாக மாற்றுதல்) சட்டம், 1969 தொடர்பான சில வழக்குகளை நிலுவையில் உள்ள பிற வழக்குகளிலிருந்து அவற்றைப் பிரித்துத் தனித்தனியாக விசாரிக்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அரசு கோர உள்ளது.
தற்போது நிலங்களின் குத்தகை காலம் முடிவடைந்ததால், அரசாங்கம் ஆனது 34,986 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஜன்மம் நிலங்களை மீட்கத் தொடங்கியது.