தமிழ்நாடு பொது விநியோகக் கழகமானது, அதன் தேவைகளில் உள்ள பெரும் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காக வேண்டி இந்திய உணவுக் கழகத்திடம் (FCI) கூடுதலாக ஒன்பது லட்சம் டன் அரிசி ஒதுக்கீட்டைக் கோரியுள்ளது.
மாநில அரசுகளுக்கு விற்பனை செய்வதற்கான அரிசியின் இருப்பு விலை என்பது ஒரு கிலோவிற்கு (இந்தியா முழுவதும்) 22.5 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2023 ஆம் ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மத்திய அரசு ஆனது மாநில அரசுகளுக்கான இந்த விற்பனை விலையை ஒரு கிலோவிற்கு 23 ரூபாயிலிருந்து 34 ரூபாயாக உயர்த்தியது.
மேலும், மாநிலங்களுக்கு வேண்டிய அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றின் மீதான விற்பனை யையும் நிறுத்தியது.
தமிழ்நாடு மாநிலத்திற்கான 2.97 லட்சம் டன்கள் என்ற மாதாந்திர ஒதுக்கீட்டிற்குப் பதிலாக, சராசரியாக மாதாந்திர அரிசி கொள்முதல் ஆனது சுமார் 3.63 லட்சம் டன் ஆகும்.