TNPSC Thervupettagam

கூடுதல் இயந்திரங்களுக்கு நட்சத்திரத் தரவரிசை

March 11 , 2019 1958 days 567 0
  • ஆற்றல் சேமிப்பைக் குறிப்பிடுவதற்காக தற்போது மைக்ரோவேவ் ஓவன்களுக்கும் துணி துவைக்கும் இயந்திரங்களுக்கும் நட்சத்திரத் தரவரிசை அளிக்கப்படும்.
  • மைக்ரோவேவ் ஓவன்களுக்கும் துணி துவைக்கும் இயந்திரங்களுக்கும் நட்சத்திரத் தரவரிசை அளிக்கப்படும் இத்திட்டமானது விருப்ப அடிப்படையில் நிறைவேற்றப்படும். இத்திட்டம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையில் நடைமுறையிலிருக்கும்.
  • துணி துவைக்கும் இயந்திரங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட விதிமுறையானது நட்சத்திரத் தரவரிசை அளிக்கப்படுவதற்காக ஆற்றல் சேமிப்புடன் கூடுதலாக நீர்சேமிப்பையும் கொண்டிருக்கும்.
  • தரவரிசைகள் ஆற்றல் சேமிப்பு அமைப்பால் வழங்கப்படும்.
  • 2001 ஆம் ஆண்டு ஆற்றல் சேமிப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பே ஆற்றல் சேமிப்பு அமைப்பாகும்.
  • ஆற்றல் சேமிப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்குள்ளாக இந்தியப் பொருளாதாரத்தின் மீதான ஒட்டுமொத்த ஆற்றல் தாக்கத்தைக் குறைப்பதற்கான யுக்திகளோடு ஆற்றல் சேமிப்பு அமைப்பு அரசிற்கு உதவிகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்