தமிழக அரசானது சிறு கனிமத் துறையில் ஆண்டிற்கு சுமார் 400 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட உள்ளது.
இது சமீபத்தில் சிறு கனிமங்களுக்கான சுரங்க உரிமத் தொகை, பகுதி மதிப்பீடு, குறைந்த பட்சக் குத்தகைத் தொகை மற்றும் சந்தாதாரர் கட்டணம் ஆகியவற்றைத் திருத்தியமைத்துள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் ஆனது செப்டம்பர் 05 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளில் சமீபத்தில் இதற்கான திருத்தம் ஆனது மேற்கொள்ளப்பட்டது.