2025 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், "பருத்தி வேளாண்மையின் உற்பத்தித் திறன் மற்றும் அதற்கான நிலைத்தன்மையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கும், கூடுதல் நீளம் கொண்ட தரமான இழை (ELS) கொண்ட (ELS) பருத்தி வகைகளை ஊக்குவிப்பதற்குமான" ஐந்து ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.
பருத்தியானது அதன் இழைகளின் நீளத்தின் அடிப்படையில் நீண்ட, நடுத்தர அல்லது குறுகிய இழையாக வகைப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் வளர்க்கப்படும் பருத்தி வகையில் தோராயமாக 96 சதவீதப் பங்கினைக் கொண்ட கோசிபியம் ஹிர்சுட்டம், நடுத்தர இழை வகையைச் சேர்ந்தது.
அதன் இழை நீளம் 25 முதல் 28.6 மி.மீ வரை இருக்கும்.
அதே சமயம், ELS வகைகள் ஆனது 30 மி.மீ மற்றும் அதற்கு மேற்பட்ட இழை நீளத்தைக் கொண்டுள்ளன.
பெரும்பாலான ELS பருத்தி வகையானது, பொதுவாக எகிப்திய அல்லது பிமா பருத்தி என்று அழைக்கப்படும் கோசிபியம் பாரபடென்ஸ் இனத்திலிருந்து பெறப்படுகிறது.
தென் அமெரிக்காவில் தோன்றிய ELS பருத்தி வகையானது, இன்று பிரதானமாக சீனா, எகிப்து, ஆஸ்திரேலியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் வளர்க்கப்படுகிறது.
இந்தியாவில், மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள அட்பாடி தாலுக்காவின் மழைப்பொழிவு மிக்க பகுதிகளிலும், தமிழ்நாட்டில் கோயம்புத்தூரைச் சுற்றியும் சில ELS பருத்தி வகை வளர்க்கப்படுகின்றன.
தற்போது, இந்தியாவில் ELS பருத்தி வகையின் ஒரு ஏக்கருக்கான மகசூல் அளவு மற்ற நாடுகளை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.
உதாரணமாக, பிரேசில் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 20 குவிண்டால் மகசூல் கொண்டு உள்ள அதே நேரத்தில் சீனா 15 குவிண்டால் மகசூலைக் கொண்டுள்ளது.