கூடுதல் பண இருப்பு விகித முறையினை (I-CRR) படிப்படியாக நிறுத்த உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
செப்டம்பர் 09 ஆம் தேதியன்று வைப்பு வைக்கப்பட்ட கூடுதல் பண இருப்பு விகிதத்தில் 25 சதவீதத்தினை வெளியிட்ட நிலையில், செப்டம்பர் 23 தேதியன்று வைப்பு வைக்கப் பட்ட மற்றொரு கூடுதல் பண இருப்பு விகிதத்தில் 25 சதவீதத்தினை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும்.
வைப்பு வைக்கப்பட்ட மீதமுள்ள 50% கூடுதல் பண இருப்பு விகிதமானது அக்டோபர் 07 ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
இது பணப்புழக்கத்தில் ஏற்படும் திடீர் நெருக்கடிகளைத் தவிர்த்தல் மற்றும் பணச் சந்தையின் முறையான செயல்பாட்டினை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்டு கூடுதல் பண இருப்பு விகித நிதிகள் படிப்படியாக வெளியிடப் படுகிறது.
பண கையிருப்பு விகிதம் (CRR) 4.5% ஆக மாறாமல் கடைபிடிக்கப் படும்.
பண கையிருப்பு விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியிடம் பல்வேறு வங்கிகள் வைத்திருக்க வேண்டிய கட்டாய இருப்புத் தொகையாகும்.
கூடுதல் பண இருப்பு விகிதம் ஆனது வங்கி அமைப்பில், முதன்மையாக 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுதல் போன்ற சூழ்நிலைகளில் ஏற்படுகின்ற அதிகப் படியான பணப் புழக்கத்தைத் திரும்பப் பெறுவதற்காக அறிமுகப் படுத்தப் பட்டது.