TNPSC Thervupettagam

கூடுதல் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு

February 15 , 2025 7 days 52 0
  • தமிழ்நாடு அரசு ஆனது, கூடுதல் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவை (SEAC) அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது மாநிலத்தில் அதிகரித்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் (SEAC) பதவிக் காலம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது.
  • இந்தக் குழுக்களை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்திற்கு வேண்டிய அனுமதியை விரைவுபடுத்துமாறு தமிழக அரசு கோரியுள்ளது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை நன்கு மேம்படுத்துவதற்காக ஒரு பசுமைக் கவச அமைப்பினை உருவாக்குவதற்கான ஒரு திட்டத்தை அனுமதிக்குமாறு மாநில அரசு கோரியுள்ளது.
  • இயற்கை சார்ந்தத் தீர்வுகள் மூலம் மாவட்டத்தில் பல கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பை குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்