TNPSC Thervupettagam

கூட்டு வான் பயிற்சி

December 5 , 2017 2575 days 854 0
  • தென் கொரியத் தலைநகர் சியோலில் தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து ‘விஜிலெண்ட் ஏஸ்’ (Vigilant Ace) எனும் மிகப்பெரிய அளவிலான கூட்டு வான் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.
  • வட கொரியா வாசங்-15 எனும் அதிநவீன மற்றும் கண்டங்களுக்கு இடையேயான ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தததை அடுத்து இந்த கூட்டுப்போர் பயிற்சியை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
  • கொரியத் தீபகற்பத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், போர் தயார்நிலை மற்றும் போர் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்காகவும் இக்கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையேயான வருடாந்திர கூட்டு வான் பயிற்சியின் பெயரே விஜிலெண்ட் ஏஸ்  ஆகும்.
  • கொரியத் தீபகற்பத்திலிருந்து ஜப்பானின் ஒகினாவில் அமைந்துள்ள கடேனா வான்படை தளம் வரை போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்