TNPSC Thervupettagam

கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு - அர்மேனியா

June 17 , 2024 31 days 130 0
  • அர்மேனியா நாட்டுப் பிரதமர், அந்த நாட்டு அரசானது கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிலிருந்து (CSTO) வெளியேற உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
  • CSTO என்பது தாக்குதல் ஏற்பட்டால் தங்களுக்குள் ஒன்றையொன்றுப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ள முன்னாள் சோவியத் நாடுகளை உறுப்பினர்களாகக்  கொண்ட, ரஷ்யாவின் தலைமையிலான கூட்டணியாகும்.
  • ரஷ்ய நாட்டு அரசானது, நாகோர்னோ-கராபாக் விவகாரத்தில் தலையிட மறுத்ததால் ரஷ்யாவுடனான அர்மேனியாவின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
  • அர்மேனியா நாடானது, ரஷ்ய நாட்டின் அதிபருக்கு பிடியாணை பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதத்தில் இணைந்தது.
  • இந்த CSTO அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசுகளுக்கு இடையேயான இராணுவக் கூட்டணி (ஆறு நாடுகள்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்