கூட்டுறவுத் துறை உறுப்பினர்களின் சமூகப் பாதுகாப்பு
November 30 , 2024 44 days 110 0
தமிழ்நாடு மாநில அரசானது, கூட்டுறவுத் துறையின் கீழ் ‘வேர்கள்’, ‘விழுதுகள்’ மற்றும் ‘சிறகுகள்’ ஆகிய மூன்று புதிய முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
‘சிறகுகள்’ திட்டத்தின் கீழ், திருநர் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் 5% வட்டி விகிதத்தில் 5,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான கடனைப் பெறலாம்.
சிறு தொழில்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இந்தக் கடன்களைப் பெற இயலும்.
கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு உயிரிழப்பு, இயலாமை மற்றும் காயம் போன்றவை ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த 'வேர்கள்' முன்னெடுப்பின் கீழ் நிதி சார் பலன்கள் வழங்கப்படுகிறது.
உறுப்பினர்கள், விபத்து மூலம் ஏற்படும் மரணத்திற்கு சுமார் 1 லட்சம் ரூபாயும், இயற்கையான மரணத்திற்கு சுமார் 50,000 ரூபாயும், நிரந்தர உடல் குறைபாட்டிற்கு 50,000 ரூபாயும் உதவித் தொகைப் பலன்களைப் பெறலாம்.
உறுப்பினர்கள் 100 ரூபாய் மாதாந்திரச் சந்தா செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
‘விழுதுகள்’ முன்னெடுப்பு என்பது கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, விபத்து மூலம் ஏற்பட்ட மரணத்திற்கு 5 லட்சம் ரூபாயும், இயற்கையான மரணத்திற்கு சுமார் 1 லட்சம் ரூபாயும், நிரந்தர உடல் குறைபாட்டிற்கு 2.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
பணியாளர்கள் மாதந்தோறும் 300 ரூபாய் செலுத்தி இத்திட்டத்தில் சேர வேண்டும்.