TNPSC Thervupettagam

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம்

June 5 , 2023 414 days 272 0
  • கூட்டுறவுத் துறையில் உணவு தானியச் சேமிப்புத் திறனை 70 மில்லியன் டன்கள் வரை அதிகரிக்கச் செய்வதற்கான 1 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கூட்டுறவுத் துறையில் மேற்கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டமாக இது இருக்கும்.
  • இந்தத் திட்டமானது, நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டச் சேமிப்புக் கிடங்கு வசதிகளை அமைப்பதற்குக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவும்.
  • இது இந்திய உணவு கழகத்தின் சேமிப்புச் சேவை மீதான ஒரு சுமையை குறைக்கும், பண்ணை விளைபொருட்களில் ஏற்படும் விரயத்தை (வீணாதலை) குறைக்கும் மற்றும் விவசாயிகள் தங்கள் விற்பனையைச் சிறப்பாக திட்டமிடவும் உதவும்.
  • இது வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்துறை ஆகிய அமைச்சகங்களின் தற்போதையத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு திட்டமாகும்.
  • கூட்டுறவு அமைச்சகமானது வெவ்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தது 10 மாவட்டங்களில் இந்த சோதனைத் திட்டத்தினைச் செயல்படுத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்