TNPSC Thervupettagam

கெக்கோ மிசோரமென்சிஸ்

May 23 , 2023 556 days 307 0
  • மிசோரம் பல்கலைக் கழகம் மற்றும் ஜெர்மனியின் டூபிங்கன் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் உயிரியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், இந்தோ-மியான்மர் எல்லையில் மிசோரம் மாநிலத்தில் ஒரு புதிய வகை மரப் பல்லியினைக் கண்டறிந்துள்ளனர்.
  • உலகம் முழுவதிலும் இதன் வகையிலான 13 இனங்கள் உள்ளன.
  • இவை தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.
  • இவை மிசோரமில் காணப் படுவதாக கண்டறியப் பட்டுள்ளன.
  • இது முன்னதாக வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து மற்றும் கம்போடியா உள்ளிட்ட தெற்காசியாவின் சில பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த மரப் பல்லிகள் அளவில் சிறியவையாகும் என்பதோடு, இந்த மாமிச உண்ணிப் பல்லிகள் உலகம் முழுவதும் வெப்பமானப் பருவநிலை கொண்ட பகுதிகளில் காணப் படுகின்றன.
  • சுமார் 20 செ.மீ நீளம் கொண்ட இந்தப் புதிய இனமானது, மரங்களில் வாழும் ஒரு மரப் பல்லியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்