மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் நாட்டில் கழுகுகளைப் பாதுகாப்பதற்காக கீட்டோபுரோஃபென் மற்றும் அசெக்ளோஃபெனாக் ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்குத் தடை விதித்துள்ளது.
இது 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் தடை செய்யப் பட்டுள்ளது.
இவை ஊக்கிகள் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) ஆகும்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளில் வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும் மருந்தாக அவை அடிக்கடி பயன்படுத்தப் படுகின்றன.
இந்த மருந்தினைத் தடை செய்வதற்கான ஒரு பரிந்துரையை மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் வழங்கியுள்ளது.
மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் என்பது இந்தியாவில் தொழில்நுட்ப மருந்து தொடர்பான விவகாரங்களில் சட்ட ரீதியான முடிவுகளை எடுப்பதற்கான உச்ச நிலை வாரியமாகும்.
இது 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் நிறுவப் பட்டது.
இந்த வாரியமானது மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஒரு பகுதியாகச் செயல்படுகிறது.
இது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.