இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் குழுவானது ஆர் கீழணை என்ற ஒரு அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒத்தி வைத்துள்ளது.
இது கென்-பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
நாட்டில் முதலாவது நதிநீர் இணைப்புத் திட்டம் இதுவாகும்.
இந்தத் திட்டமானது நீர் அதிகமாக உள்ள மத்தியப் பிரதேசத்தின் கென் நதியிலிருந்து வறட்சி அதிகமாகவுள்ள பந்தேல்கண்ட் பகுதிக்கு நீர்ப்பாசனத்தை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெட்வா நதிக்கு நீர் திறக்கப் படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கென் மற்றும் பெட்வா நதிகள் மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தியாகின்றன.
இவை யமுனை நதியின் துணை நதிகளாகும்.
கென் நதியானது பன்னா புலிகள் காப்பகத்தின் வழியே பாய்கின்றது.