TNPSC Thervupettagam

கெப்லர் – 90 கோள்கள் குடும்பம்

December 20 , 2017 2402 days 857 0
  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கெப்லர் -90i எனும் கிரகத்தினை கண்டறிந்துள்ளது. கெப்லர்-90 எனும் சூரியன் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் எட்டாவது கோள் கெப்லர்-90i ஆகும். இந்த கெப்லர்-90 நட்சத்திரமானது பூமியிலிருந்து சுமார் 2545 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
  • கெப்லர்-90i பாறைகளால் உருவான சிறிய கிரகம் ஆகும். கெப்லர்-90யின் மிக அருகாமையில் இது தனது சுற்று வட்டப் பாதையினைக் கொண்டுள்ளதால், இந்த கிரகத்தின் தட்பவெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது. 14 நாட்களுக்கு ஒரு முறை கெப்லர்-90 நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கெப்லர்-90iயின் வெப்பம் சுமார் 426 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • 8 கோள்களைக் கொண்டு இயங்கும் கெப்லர்/-90 கிரக குடும்பம் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும் பொழுது நாம் வசிக்கும் சூரிய குடும்பத்துக்கு இணையாக உள்ளது. கெப்லர்-90 குடும்பமானது சூரிய குடும்பத்தின் சிறிய பதிப்பு போன்றதாகும்.
  • இந்த எட்டு கிரகங்களையும் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் கிரிஸ்டோபர் ஷாலூ மற்றும் வேண்டர்பெர்க் ஆவர். நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கியில் இருந்து பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு, அவற்றில் கூகுள் நிறுவனம் உருவாக்கிய இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தை ஈடுபடுத்தி இந்த கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • இயந்திரக் கற்றல் என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு அணுகுமுறை ஆகும். மனித மூளையில் காணப்படும் நியூரான்களின் வலைப்பின்னல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இயந்திரக் கற்றல் தொழில்நுட்பமானது கோள்கள் ஆராய்ச்சியை அணுகுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்