TNPSC Thervupettagam

கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி - நாசா

November 3 , 2018 2086 days 663 0
  • நாசாவானது (NASA - National Aeronautics and Space Administration) கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கிக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது.
  • இந்த தொலைநோக்கியானது ஒன்பதரை ஆண்டுகள் பணிக்குப் பின்பு எரிபொருள் இன்றி செயலிழந்தது. இந்த ஒன்பதரை ஆண்டுகள் காலகட்டத்தில் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உயிர் வாழ்வதற்கு உகந்த ஏறத்தாழ 2600 கோள்களை இந்த தொலைநோக்கி கண்டறிந்துள்ளது.
  • கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி இது ஆளில்லா விண்வெளிக் கண்காணிப்பு தொலைநோக்கியாகும். இது நாசாவின் கண்டுபிடிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • ஒரு நட்சத்திரத்தின் உயிர் வாழத் தகுந்த பகுதிகளில் பூமியைப் போன்ற அளவுடைய கோளை (கெப்ளர் - 69C) முதன்முறையாகக் கண்டறிந்த தொலைநோக்கி கெப்ளர் ஆகும்.
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2017 ஆம் ஆண்டு மார்ச் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பூமியைப் போன்ற அளவுடைய கோள்களைக் கொண்ட டிராப்பிஸ்ட்-1 என்ற அமைப்பை இது ஆராய்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்