அரபு லீக் / கூட்டமைப்பின் அவசர உச்சி மாநாடு ஆனது, காசாவை மீள்கட்டமைக்கச் செய்வதற்கான 53 பில்லியன் டாலர் மதிப்பிலான எகிப்தியத் திட்டத்தினை "விரிவான அரபு உத்தி"யாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த கெய்ரோ பிரகடனம் ஆனது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில், மனாமாவில் நடைபெற்ற கடைசி அரபு கூட்டமைப்பு உச்சி மாநாட்டின் பஹ்ரைன் பிரகடனத்தைப் பின்பற்றுகிறது.
இந்தத் திட்டம் ஆனது, கிழக்கு ஜெருசலேம் நகரினைப் பாலஸ்தீனத்தின் தலைநகராக கொண்டு, 1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட இரு நாடுகள் தீர்வை ஆதரிக்கிறது.
இது ஓர் இடைக்கால காலத்திற்குத் தகுதி வாய்ந்த காசா வாசிகளைக் கொண்ட "காசா நிர்வாகக் குழு" மற்றும் மீட்பு திட்டங்களுக்கான அறக்கட்டளை நிதி ஆகியவற்றைக் கோருகிறது.