கெய்ல் (இந்தியா) நிறுவனம் புதுமையான தொடக்கநிலை நிறுவன முயற்சிகளை (Start-up initiative ) கண்டறிந்து மேம்படுத்தவும் , ஊக்குவிக்கவும் ‘பங்க்’ ('Pankh') என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
தொடக்கத்தில் முதலீடு செய்ய , 50 கோடி ரூபாயை கெயில்(இந்தியா) நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினை, இயற்கை எரிவாயு மற்றும் அதன் தருவிப்புகள் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
திறம்மிக்க தொடக்கநிலை நிறுவன விண்ணப்பதாரர்கள், தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்க ஒரு நிகழ்நிலைத் தளத்தை கெய்ல் (இந்தியா) நிறுவனம் உருவாக்கியுள்ளது.