பூடான் நாட்டின் கெலேபு என்ற நகரில் உருவாக்கப்பட்டு வரும் 2,500 சதுர கிலோமீட்டர் பரப்பிலான "சுழிய அளவு கார்பன் உமிழ்வு" வெளியிடும் ஒரு நகரத்திற்கு இந்தியா ஆதரவளித்து வருகிறது.
இது ஒரு சிறப்பு நிர்வாகப் பகுதி (SAR) ஆகும்.
இது அதன் சொந்த அரசாங்கத்தைக் கொண்டிருக்கும் என்பதோடு மேலும், அதன் சொந்தச் சட்டத்தை உருவாக்கச் செய்வதற்கான சுதந்திரம் மற்றும் சுதந்திரமான நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இது ஒரு தேசியப் பூங்கா மற்றும் ஒரு வனவிலங்குச் சரணாலயம் என இரண்டு பாதுகாக்கப் பட்ட பகுதிகளைக் கொண்டிருக்கும்.
‘விழிப்புணர்வு மிக்க நகரம்' என்ற இந்தத் திட்டம் ஆனது பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சக் அவர்களால் கருத்தாக்கம் செய்யப்பட்டது.