சர்வதேச அளவில் கெல்ப் காடுகள் (Kelp Forests) போன்ற கடல்சார் வாழ்விடங்களை காலநிலை மாற்ற நிகழ்வுகள் மாற்றியமைக்கின்றன.
கெல்ப் என்பது உலகம் முழுவதும் கடற்கரை முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள ஆழமற்ற நீர்ப் பரப்பு, ஊட்டச் சத்து மிக்க உப்பு நீர் ஆகியவற்றில் வளரும் மிகப்பெரிய பழுப்பு நிறக் கடற்பாசி வகையாகும்.
350ற்கும் மேற்பட்ட வெவ்வேறான இனங்கள் மற்றும் 1,00,000 வரையிலான சிறிய முதுகெலும்பற்ற இனங்கள் ஆகியவை ஒரே கெல்ப் தாவரத்தில் வாழும் திறன் கொண்டவை.
அதிக அளவிலான மீன்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை நீருக்கு அடியில் உள்ள கெல்ப் காடுகளைச் சார்ந்துள்ளன.
இந்தக் காடுகள் உள்ள இடங்கள் : மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்குக் கனடா, தெற்கு ஐரோப்பா, வடக்கு கலிபோர்னியா மற்றும் கிழக்கு அமெரிக்கா.
இது மிகக் கடுமையான ஆர்க்டிக் சுற்றுச் சூழலிலும் வளர்ந்து, உயிர்வாழும் திறன் கொண்டு விளங்குகின்றது.