சீன மக்கள் குடியரசுக்கான இந்திய தூதராக கெளதம் பம்பாவாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு பணிப்பிரிவைச் சேர்ந்த இந்திய அயல்நாட்டுப் பணி அதிகாரியான கெளதம் பம்பாவாலே, தற்போது பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்குமுன் பம்பாவாலே பூட்டான் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்தார்.
பம்பாவாலேவின் புதிய பணி நியமனத்தைத் தொடர்ந்து அவர் வகித்து வரும் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் உயர் ஆணையர் பதவி காலியாகிறது.
இந்த பதவிக்கு தற்போதைய போலந்து நாட்டின் இந்தியத் தூதர் அஜய் பிசாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.