TNPSC Thervupettagam
September 11 , 2020 1416 days 695 0
  • அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாடு என்ற புகழ்பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் இருந்த நபரான கேசவானந்தா பாரதி சமீபத்தில் காலமானார்.
  • இவர் கேராளவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள எட்னீர் மடத்தின் தலைமைக் குரு ஆவார்.
  • இவர் கேசவானந்தா பாரதி எதிர் கேரள அரசு என்ற வழக்கில் மனுதாரராக இருந்தார்.
  • இவர் 1970 ஆம் ஆண்டில், 1969 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட “கேரள நிலச் சீர்த்திருத்தங்கள் சட்டம், 1963” என்ற ஒரு சட்டத்தின் மூலம் மடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் கேரள அரசின்  முயற்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.
  • இவர் இந்த நடவடிக்கையானது அவரது அடிப்படை மதச் சுதந்திரம் (சரத்து 25), மதம் சார்ந்த பிரிவு மீதான உரிமை (சரத்து 26) மற்றும் சொத்துரிமை (சரத்து 31) ஆகியவற்றை மீறுவதாக வாதாடினார்.
  • இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக் கோட்பாட்டை வலியுறுத்திய இந்திய உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற தீர்ப்பு இதுவாகும்.
  • இந்த வழக்கானது சரத்து 368ன் மூலம் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை பாதித்தால் மட்டுமே அது அடிப்படை உரிமைக்கான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்