October 5 , 2020
1516 days
663
- இரண்டு மனித சீரம் மாதிரிகளில் கேட் கியூ தீநுண்மிக்கு (Cat que virus) எதிரான எதிர்மங்கள் இருப்பதை இந்திய மருத்துவக் குழுவானது கண்டறிந்துள்ளது.
- கேட் கியூ தீநுண்மி ஒரு பொது சுகாதார நோய்க் கிருமியாக மாறக்கூடும் என்பதையும் அது பரவினால் ஒரு கொள்ளை நோய்க்கு வழிவகுக்கும் என்பதையும் இது குறிக்கிறது.
- இது ஆர்த்தோபன்யா தீநுண்மி இனத்தின் சிம்பு வகை தீநுண்மியைச் சேர்ந்ததாகும்.
- இது முதன்முதலில் 2004 ஆம் ஆண்டில் வடக்கு வியட்நாமில் உள்ள கொசுக்களிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறது.
- இது சீனாவிலும் பதிவாகி உள்ளது.
- இது ஆர்த்ரோபாட் மூலம் பரவும் தீநுண்மிகள் என்ற பிரிவின் கீழ் வருகிறது.
- ஆர்த்ரோபாட்கள் என்பது பூச்சிகள், சிலந்திகள் போன்ற முதுகெலும்பில்லாத விலங்குகளின் பிரிவாகும்.
- இது பன்றிகள் மற்றும் கியூலெக்ஸ் கொசுக்களில் காணப்படுகிறது.
- காட்டு மைனா போன்ற பறவைகளும் இதன் வாழ்விடமாக செயல்படக்கூடும்.
- கொசுக் கடியின் மூலம் மனிதர்களுக்குத் தொற்று ஏற்படலாம்.
- இது மனிதர்களுக்கு காய்ச்சல், மூளைக்காய்ச்சல் மற்றும் குழந்தை மூளையழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
Post Views:
663