ஆஸ்கார் விருது பெற்ற கேட் பிளாஞ்செட்டிற்கு (Cate Blanchett) பிரஞ்சு சினிமாத் துறையில் உயரிய விருதான Cesar d’ Honneur என்ற விருதானது வழங்கப்பட உள்ளது.
வாழ்நாள் சாதனை விருதான Cesar d’ Honneur விருதானது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று பாரீஸ் நகரில் நடைபெற உள்ள விழாவில் இவருக்கு வழங்கப்படும்.
மார்டின் ஸ்கார் சி. இயக்கிய ‘The Aviator’ என்ற திரைப்படத்தில் மறைந்த திரை நட்சத்திரமான கேத்ரின் ஹெப்பர்ன் என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பிளாஞ்செட் தனது முதல் ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.
2013 ஆம் ஆண்டில் வுட்டி ஆலென் தயாரித்து வெளியிட்ட “Blue Jasmine” என்ற ஒரு திரைப்படத்திற்காக இவர் தனது 2வது ஆஸ்கார் விருதினைப் பெற்றார்.