மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு மாநிலங்களின் காடு வளர்ப்புத் திட்டங்களுக்கு 47,436 கோடி ரூபாயை கேம்பா நிதியிலிருந்து விடுவித்திருக்கின்றது.
உச்ச நீதிமன்றம 2001ம் ஆண்டில் காடு வளர்ப்பு நிவாரண நிதியையும் காடு வளர்ப்பு நிவாரண நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் ஆகியவற்றையும் உருவாக்கிட ஆணையிட்டது.
மாநிலங்களுக்கான இந்நிதி காடு வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளித்திடவும் காடு மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்திடவும் எண்ணுகின்றது.
காடு மற்றும் மரங்களின் பரப்பு அதிகரிப்பானது 2030ம் ஆண்டிற்குள்ளாக 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் கரியமில வாயுவின் அளவிற்கு ஒரு கூடுதல் கரிமச் சேமிப்பை உருவாக்கிடும்.