TNPSC Thervupettagam

கேம்ப்ரியன் ரோந்து இராணுவப் பயிற்சி

October 25 , 2023 250 days 175 0
  • சர்வதேச ராணுவப் பயிற்சி போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று இந்திய இராணுவமானது தனது தனித்துவமான ராணுவத் திறமையினைச் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியுள்ளது.
  • வேல்ஸில் உள்ள பிரித்தானிய ராணுவத்தின் தலைமையகமான ப்ரெகானை தளமாகக் கொண்ட 160வது (வெல்ஷ்) படைப்பிரிவினால் இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
  • 1959  ஆம் ஆண்டு முதல் முன்னாள் கேம்ப்ரியன் ரோந்துப் பயிற்சியானது ஆண்டு தோறும் நடத்தப் படுவதோடு உலகம் முழுவதும் உள்ள ராணுவக் கூட்டாண்மை நாடுகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறது.
  • இது நேட்டோவால் நடத்தப்படும் கடினமான ரோந்து சோதனைப் பயிற்சி என்று குறிப்பிடப் படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்தில் நடைபெற்ற இதே நிகழ்ச்சியில் இந்திய ராணுவமானது தங்கப் பதக்கத்தினை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்