TNPSC Thervupettagam

கேரள இடம்பெயர்வு கணக்கெடுப்பு

June 23 , 2022 760 days 362 0
  • கேரள மாநிலமானது “2022-23 ஆம் ஆண்டிற்கான கேரள இடம்பெயர்வு கணக்கெடுப்பு” நடத்த உள்ளதாக  அறிவித்துள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள நாடுகளில் வாழும் மலையாள மொழி இனத்தவரைப் பற்றிய தரவு வங்கியைத் தயாரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக “மலையாளி பிரவாசி தளமானது” தொடங்கப் படும்.
  • வெளிநாட்டினருக்கான காப்பீடு மற்றும் பிற நலத்திட்டங்களை இணைப்பதற்கு இந்த தளமானது பயன்படுத்தப்படும்.
  • இந்தத் தரவுத்தளத்தைத் தயாரிப்பதற்காக விரிவான உலகளாவியப் பதிவு இயக்கமும் நடத்தப்பட உள்ளது.
  • 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் கணக்கெடுப்பானது, அந்தக் காலக் கட்டத்தில் சுமார் 1.5 மில்லியன் கேரள மக்கள் இந்தியாவிற்கு வெளியே வெளி நாடுகளில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டது.
  • 2018 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் உள்ள நாடுகளுக்கு கேரளாவிலிருந்து 2.12 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்