கேரள மாநிலச் சட்டமன்றம் ஆனது, 2025 ஆம் ஆண்டு கேரள மாநிலத் தனியார் பல்கலைக்கழகங்கள் (ஸ்தாபனம் மற்றும் ஒழுங்குமுறை) என்ற ஒரு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இது மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு வழி வகுக்கிறது.
இந்த முக்கியமான மசோதாவானது, 'பல கல்லூரிகளை உள்ளடக்கிய' பல்கலைக்கழக வளாகத்தினை நிறுவ வழிவகுக்கிறது.
அந்த மாநிலத்தின் நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு ஒவ்வொரு படிப்பிலும் சுமார் 40% இடங்களை ஒதுக்க வேண்டும் என்று இது நிபந்தனை விதிக்கிறது.
தற்போது, தனியார் பல்கலைக்கழகங்கள் இல்லாத ஒரே மாநிலம் கேரளா ஆகும்.
நாடு முழுவதும் 471 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.
குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன (65) என்ற ஒரு நிலையில் அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 53 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன.