சர்வதேச நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்கள் மன்றமானது (ICOMOS) கேரளாவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மிகுந்த கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதத்தினை மதிப்பிடுவதற்கு கேரள பாரம்பரிய மீட்புத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
ICOMOS (International Council on Monuments and Sites) ஒரு உலகளாவிய நினைவுச் சின்ன பாதுகாப்பு அமைப்பாகும்.
கேரளாவில் வெள்ளத்தால் சேதமடைந்த கலாச்சார பாரம்பரியத்தை அவசரமாக மீட்டெடுப்பதற்கான தளத்தை அமைக்கும் முயற்சியை இது முன்னெடுக்கிறது.
மத்திய அரசானது இதை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவித்துள்ளது.
ICOMOS ஆனது இந்த பேரிடருக்கு பிந்தைய பணிகளில் பணியாற்றுவதற்காக பாரம்பரிய சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆய்வு மையத்தை (International Centre for the Study of the Preservation and Restoration of Cultural Property - ICCROM) அணுகி உள்ளது.
ICCROM ஆனது இத்தாலியின் ரோம்-ஐ அடிப்படையாகக் கொண்ட, உலகம் முழுவதிலுமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சர்வதேச அரசாங்க அமைப்பு ஆகும்.
ICOMOS ஆனது பிரான்சின் பாரிஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்ட உலக நினைவுச் சின்னப் பாதுகாப்பு அமைப்பு (அரசு சாரா அமைப்பு) ஆகும்.
1964 ஆம் ஆண்டு வெனிஸ் சாசனத்தின் விளைவாக வார்சாவில் (போலந்து) 1965ம் ஆண்டு இது நிறுவப்பட்டது.
மேலும் இது கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் குறிப்பாக உலக பாரம்பரிய ஒப்பந்தத்தை அமல்படுத்திடவும் யுனெஸ்கோ அமைப்பிற்கான ஒரு ஆலோசனை அமைப்பு ஆகும்