TNPSC Thervupettagam

கேரளம் பெயர் மாற்றம் மீதான மாநில சட்டசபையின் தீர்மானம்

August 15 , 2023 340 days 300 0
  • கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதில் இருந்து ‘கேரளம்’ என மாற்றுவதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் கேரளச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
  • மலையாள மொழியில், இந்த மாநிலம் 'கேரளம்' என்று குறிக்கப்படுகிறது, ஆனால் மற்ற மொழிகளில், இது 'கேரளா' என்று அழைக்கப் படுகிறது.
  • ‘கேரளம்’ என்றச் சொல்லானது தென்னையைக் குறிக்கும் “கேரா,” மற்றும் நிலத்தைக் குறிக்கின்ற “ஆலம்” ஆகிய இரண்டு மலையாளச் சொற்களின் மீதான இணைப்பினைக் குறிக்கிறது.
  • இவ்வாறு, ‘கேரளம்’ என்ற சொல் “தென்னை மர தேசம்” என்பதன் சாராம்சத்தை நுணுக்கமாக உள்ளடக்கியுள்ளது.
  • இது இந்தியாவின் ஒட்டு மொத்தத் தேங்காய் சாகுபடியில் சுமார் 45% பங்களிப்பினைக் கொண்டுள்ளது.
  • முதல் அட்டவணையில் அதன் பெயரை மாற்றுவதற்கு அரசியலமைப்பின் 3வது சட்டப் பிரிவின் விதிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என்ற சொல்லானது அந்த மாநிலத்தின் அதிகாரப் பூர்வப் பெயராக ஏற்றுக் கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்