TNPSC Thervupettagam

கேரளா - CAA எதிர்ப்புத் தீர்மானம்

January 3 , 2020 1663 days 707 0
  • சர்ச்சைக்குரிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், 2019 (Citizenship Amendment Act - CAA) என்ற சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய இந்தியாவின் முதலாவது மாநிலமாக கேரள மாநிலம் உருவெடுத்துள்ளது.
  • கேரள அரசாங்கத்தின் கூற்றுப் படி, CAA சட்டமானது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையான மதச்சார்பின்மைக்கு முரணானதாகும்.
  • குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஆனது கடந்த  ஆண்டு டிசம்பர்  மாதம் நிறைவேற்றப் பட்டது.
  • இந்தச் சட்டம் 1955 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தைத் திருத்தியது.
  • இது இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமையைப் பெற அனுமதிக்கின்றது.
  • இந்தச் சட்டம் குறித்த பிரச்சினை என்னவென்றால், இச்சட்டத்தில் முஸ்லிம்கள் இடம் பெறவில்லை என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்