TNPSC Thervupettagam

கேரளா – இயங்கலை வழி நிரந்தர லோக் அதாலத் சேவைகள்

April 22 , 2025 15 hrs 0 min 30 0
  • நிரந்தர லோக் அதாலத்களுக்கான இயங்கலை வழி மனு தாக்கல் மற்றும் விசாரணை வசதிகளை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.
  • இது கேரள மாநிலச் சட்ட சேவைகள் ஆணையத்தின் (KELSA) முன்னெடுப்பாகும்.
  • விண்ணப்பதாரர்கள் இந்த மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்தும் தங்கள் வழக்குகளை இயங்கலையில் தாக்கல் செய்ய இது உதவும் என்பதனால் இது நேரம், வளங்கள் மற்றும் முயற்சியை மிச்சப்படுத்த உதவும்.
  • லோக் அதாலத் என்பது சர்ச்சைகளைச் சுமூகமாக தீர்க்கும் ஒரு மாற்றுத் தகராறு தீர்வு தளமாகும்.
  • தற்போது, ​​திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் நிரந்தர லோக் அதாலத்கள் நடத்தப் படுகின்றன.
  • இயற்கைப் பேரழிவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டமான ஆதி ஜீவனம் எனும் திட்டத்தினையும் கேரள மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சமயம் எனும் மற்றொரு திட்டம் காவல் நிலைய வழக்குகளுக்கு முந்தைய நிலையில் உள்ள உரிமையியல், பகுதியளவு உரிமையியல் சார்ந்த மற்றும் மிகவும் சிக்கலான குற்றவியல் விவகாரங்களை அமைதியான மற்றும் மிகவும் இணக்கமான முறையில் தீர்ப்பதற்கானதாகும்.
  • திருமணம் மற்றும் குடும்ப தகராறுகளைத் தீர்ப்பதற்காக வேண்டிய ஒரு ஆலோசனை வழிமுறையும் இதில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்