TNPSC Thervupettagam

கேரளாவின் MMR நிலை

January 20 , 2025 2 days 59 0
  • தற்போது நாட்டிலேயே மிகக் குறைவாக, ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 19 ஆக இருக்கும் கேரளாவின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் ஆனது தற்போது சீராக உயர்ந்து வருகிறது.
  • ஆண்டுதோறும் மிகச் சராசரியாக 5-5.5 லட்சம் பிறப்புகள் பதிவான மாநிலம் ஆனது, தற்போது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குறைவாக 3,93,231 பிறப்புகளை எட்டி உள்ளது.
  • இந்த மாநிலம் 2020-21 ஆகிய காலக் கட்டத்தினைத் தவிர, பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதத்தில் மிகவும் தொடர்ந்து உறுதியான நிலையினைத் தக்க வைத்து வருகிறது.
  • புள்ளிவிவர வரைபடத்தில், 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து பதிவான சராசரி 5.5 லட்சம் வருடாந்திரப் பிறப்புகளிலிருந்து, 4,96,262 பிறப்புகள் பதிவு செய்யப்பட்ட 2016 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த எண்ணிக்கை ஆனது ஐந்து லட்சத்திற்குக் கீழே சென்றது.
  • 2018 ஆம் ஆண்டு முதல், இந்த எண்ணிக்கையானது சீராகக் குறைந்து வருகிறது என்ற ஒரு நிலையில் இது மீண்டும் ஐந்து லட்சத்திற்கு மேல் அதிகரிக்கவில்லை.
  • கடைசியாக வெளியிடப்பட்ட VSR (2021) அறிக்கையில் கேரளாவில் மொத்தப் பிறப்பு எண்ணிக்கை 4,19,767 ஆக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்