TNPSC Thervupettagam

கேரளாவின் சுகாதாரப் புரட்சி

February 21 , 2025 2 days 48 0
  • தற்போது சுமார் 2,095.63 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தற்போது கிடைக்கப் பெறும் என்ற ஒரு மொத்த சேமிப்புத் திறனுடன் ஆக்ஸிஜன் தன்னிறைவை நோக்கிய அதன் திட்டம் அம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.
  • அம்மாநில அரசாங்கமானது 709 குடும்ப நல மையங்களை நிறுவுவதன் மூலம், ஆரம்ப சுகாதாரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
  • அந்த மாநிலத்தில் உள்ள மொத்தம் 885 ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுமார் 709 நிலையங்கள் மிக நன்கு மேம்படுத்தப் பட்டு, கேரளா முழுவதும் உள்ள சமூகங்களுக்கு அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்துகிறது.
  • கடந்த மூன்றரை ஆண்டுகளில் 2,517,000 பேர் இலவச சிகிச்சை மூலம் பயனடைந்து உள்ளனர்.
  • தற்போது 93 நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள 380 நகர்ப்புறப் பொதுச் சுகாதார மையங்களுடன் மொத்தம் 5,415 சமூக சுகாதார மையங்கள் செயல்படுகின்றன.
  • அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல இருதய ஆய்வுக் கருவிகளைக் கொண்ட ஆய்வகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் கேரளாவாகும் என்ற நிலையில் மேலும், அனைத்து மாவட்ட/பொது/தாலுகா தலைமை மருத்துவமனைகளிலும் கூழ்மப் பிரிப்பு அலகுகள் கொண்டிருக்கும் நிலையை அடைந்த முதல் மாநிலமாகவும் உள்ளது.
  • அங்கு அனைத்து மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் பக்கவாத சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட முதல் இந்திய மாநிலம் கேரளா ஆகும்.
  • திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியானது, நரம்பு செல்களுடன் தொடர்புடைய பல நோய்களைக் கண்டறியும் ஒரு ஆய்வகத்துடன் கூடிய, பக்கவாத நோயாளிகளுக்கு கிடைக்கும் சிகிச்சை நலனை மேம்படுத்துகின்ற, மிக விரிவான பக்கவாத சிகிச்சைப் பிரிவை நிறுவிய முதல் இந்திய மாநிலம் என்றப் பெருமையினைப் பெற்றுள்ளது.
  • கேரளாவில் 2011 ஆம் ஆண்டு முதல் 99 தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்