சமீபத்தில் கேரள அரசு அதன் மாநில அரசுப் பள்ளிகளில் புதிய மின்னணு கழிவு அகற்றும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் நோக்கம் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களிலும் வேறுபல மையங்களிலும் உள்ள மின் கழிவுகளை கையாள்வது ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 10000 பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து தோராயமாக 1 கோடி கிலோகிராம் எடையுள்ள மின்கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிடைக்கும் நிதியில் புதிய கணினிகள் அதே நிறுவனங்களுக்கு வாங்கப்படும்.
இந்த மின் கழிவுப் பட்டியலில் 2000ம் ஆண்டிலிருந்து மாநிலத்தில் பயன்படுத்தாமல் உள்ள பழைய மின்னணுத் திரைகள், சுட்டிகள் [Mouse], கீ.போர்டுகள் மற்றும் தடங்கலிலா மின்திறன் அமைப்புகள் ஆகியவை அடங்கும்.
இது தூய்மையான கேரளா நிறுவனமும், IT @ School Project என்று முன்னர் அறியப்பட்ட கேரள உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கூட்டு முயற்சி ஆகும்.