சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கேரளாவில் உள்ள அக்குளம் மற்றும் வேம்பநாடு ஏரிகளுக்கு அருகில் கால்டோரிஸ் புரோமஸ் சதாசிவா எனும் வண்ணத்துப்பூச்சியை கண்டுபிடித்துள்ளனர்.
இது ப்ரோமஸ் ஸ்விப்ட் (Caltoris bromus) இனத்தின் முதல் பதிவு ஆகும்.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது.
இது லெபிடோப்டெரா குடும்பத்தின் ஹெஸ்பெரிடே (அந்துப்பூச்சிகள் மற்றும் பட்டாம் பூச்சிகள்) வகையைச் சேர்ந்தது.
இந்தப் பட்டாம்பூச்சி முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் அக்குளம் ஏரியிலும் பின்னர் 2009 ஆம் ஆண்டில் வேம்பநாட்டிலும் டாக்டர் சதாசிவன் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டது.