TNPSC Thervupettagam

கேரளாவில் புருசெல்லோசிஸ் பாதிப்பு

February 8 , 2025 15 days 68 0
  • கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல்லைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி புருசெல்லோசிஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
  • புருசெல்லோசிஸ் என்பது பெருமளவில் கால்நடைகள், பன்றிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் நாய்கள் ஆகியவற்றினை மிகவும் பாதிக்கின்ற பல்வேறு புருசெல்லா இனங்களால் ஏற்படும் ஒரு பாக்டீரியா நோயாகும்.
  • பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடித் தொடர்பு மூலமாகவோ, அசுத்தமான விலங்கு இறைச்சிகளை சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அசுத்தமான விலங்குகளில் இருந்துப் பெறப்படும் பாலினைக் குடிப்பதன் மூலமாகவோ அல்லது காற்றில் பரவும் பாக்டீரியங்களை உள்ளிழுப்பதன் மூலமாகவோ மனிதர்கள் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
  • பெரும்பாலான இந்தப் பாதிப்புகள் ஆனது, பாதிக்கப்பட்ட ஆடுகள் அல்லது செம்மறி ஆடுகளிலிருந்து பெறப்பட்ட பதப்படுத்தப்படாத பால் அல்லது பாலாடைக்கட்டிகளை உட்கொள்வதன் மூலம் ஏற்படுகின்றன.
  • ஆனால் இந்த ஒரு நோயானது மனிதனிடமிருந்து மனிதனுக்கு மிகவும் அரிதாகவே பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்