TNPSC Thervupettagam

கேரளாவில் பெருங்கற்கால மற்றும் ஒடிசாவில் புத்தர் காலக் கண்டுபிடிப்புகள்

March 29 , 2025 4 days 55 0
  • கேரளாவின் பாலக்காட்டில் உள்ள மலம்புழா அணை அருகே மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது ஏராளமான பெருங்கற்காலக் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கடப்பாவின் இலங்கமலை காப்புக் காடுப் பகுதியிலும் பண்டைய கால கல்வெட்டுகளை இந்தியத் தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.
  • இந்த ஆய்வு ஆனது மூன்று முக்கியப் பாறை உறைவிடங்களைக் கண்டுபிடிப்பதற்கு வழி வகுத்தது.
  • இவற்றில் ஒன்று விலங்குகள், வடிவியல் வடிவங்கள் மற்றும் மனித உருவங்களைச் சித்தரிக்கும் வரலாற்றுக்கு முந்தைய கால ஓவியங்களைக் கொண்டுள்ளது.
  • இந்த ஓவியங்கள் பெருங்கற்கால (இரும்பு காலம்) மற்றும் முற்கால வரலாற்றுக் காலங்களைச் (கி.மு.2 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவை.
  • ஒடிசாவின் ரத்னகிரியில், மூன்று மாபெரும் புத்தர் தலைகள், ஒரு குறுக்குக் கோட்டு வடிவமைப்பைக் கொண்ட ஒரு கல் ஸ்தூபி, ஒரு செவ்வக வடிவப் பிரார்த்தனை கூடங்கள்/சைத்ய வளாகம், மற்றும் தாரா, சுண்டா, மஞ்சுஸ்ரி போன்ற பல்வேறு தெய்வங்களைக் கொண்ட நினைவு ஸ்தூபிகள் கண்டறியப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்