TNPSC Thervupettagam

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் 2024

February 2 , 2024 294 days 1599 0
  • இந்திய அரசாங்கத்தின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழான இந்த முதன்மை நிகழ்வின் ஆறாவது போட்டியானது சமீபத்தில் நிறைவடைந்தது.
  • தமிழ்நாடு 2024 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை (KIYG) சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நான்கு நகரங்களில் நடத்தியது.
  • மகாராஷ்டிரா 57 தங்கம், 48 வெள்ளி மற்றும் 53 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றதையடுத்து கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டியின் வாகைப் பட்டத்தை வென்றது.
  • இது மகாராஷ்டிராவின் நான்காவது KIYG பட்டமாகும்.
  • இந்தப் போட்டியை நடத்திய தமிழ்நாடு மாநிலம் 38 தங்கம், 21 வெள்ளி மற்றும் 39 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
  • இரண்டு KIYG பட்டங்களை வென்றுள்ள ஹரியானா, 35 தங்கம், 22 வெள்ளி மற்றும் 46 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • தமிழ்நாட்டில் நடைபெற்ற KIYG 2024 போட்டிகளில் நடத்தப்பட்ட மொத்தம் 26 விளையாட்டுகளில் மொத்தம் 926 பதக்கங்கள் - 278 தங்கம், 278 வெள்ளி மற்றும் 370 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
  • இந்த ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தினைப் பூர்வீகமாக கொண்ட  தற்காப்புக் கலைகளின் ஒரு வடிவமான சிலம்பம், ஒரு செயல்விளக்க விளையாட்டாக அதில் இடம் பெற்றது.
  • தெலுங்கானாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை விருத்தி அகர்வால் ஐந்து தனிநபர் தங்கப் பதக்கங்களை வென்று இதில் முதல் இடத்தினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்