2022 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் சின்னம், ஜோதி மற்றும் கீதம் ஆகியவை மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.
ஐந்தாவது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளை மத்தியப் பிரதேசம் ஏற்பாடு செய்கிறது.
முதல் முறையாக, நீர் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், கேனோயிங் (சிறுபடகுப் போட்டி) மற்றும் வாள்வீச்சு போட்டிகள் இந்த கேலோ இந்தியா போட்டிகளின் ஒரு பகுதியாக இடம் பெற உள்ளன.