TNPSC Thervupettagam
June 22 , 2019 1856 days 2102 0
  • நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதமாக “கேலோ இந்தியா திட்டத்தின்” வரம்பை விரிவுபடுத்த புதிய அரசு முடிவு செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வில் உரையாற்றிய போது இதனை அவர் அறிவித்தார்.
  • தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 2500 திறமைமிக்க வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி பெறுகின்றனர். கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் 2500 வீரர்கள் இவ்வசதியினைப் பெறுவர்.
கேலோ இந்தியா விளையாட்டுகள்
  • இது இந்தியாவின் விளையாட்டுக் கலாச்சாரத்தை அடிமட்ட அளவிலிருந்துப் புதுப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வருடந்தோறும் நடைபெறும் இந்நிகழ்வின் முதல் பதிப்பானது டெல்லியிலும் (2018) இரண்டாம் பதிப்பு (2019) புனேவிலும் நடைபெற்றது.
  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளிலிருந்து 1000 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகையாக வருடந்தோறும் 5 லட்சம் ரூபாய் அடுத்த 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்